உத்தரபிரதேசம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-11-04 22:48 GMT

கோப்புப்படம் 

அயோத்தி,

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது.

அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்