உத்தர பிரதேசம்: பேசிக்கொண்டிருந்த போது திடீரென வெடித்த செல்போன் - இளைஞர் காயம்
செல்போனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வாங்கியதாக ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹிஜாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு. இவர் நேற்றைய தினம் தனது சொல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஹிமான்ஷுவின் கைவிரல்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த செல்போனை அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வாங்கியதாக தெரிவித்துள்ளார். பேசிக் கொண்டிருந்த போதே செல்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 2 செல்போன் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.