உ.பி.: ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீ பிடித்ததில் தாய், மகள் பலியான சோகம்

உத்தர பிரதேசத்தில் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீ பிடித்து எரிந்ததில் தாய் மற்றும் மகள் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-02-14 08:44 GMT



கான்பூர்,


உத்தர பிரதேசத்தில் கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட அரசு நிர்வாகத்தினர் சென்று உள்ளனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தீ குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில், அவர்களது வீடு தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயங்களுடன் தப்பினர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரமீளா தீட்சித் (வயது 44) மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் (வயது 22) ஆகிய இருவர் தீயில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி பிரமீளாவின் மகனான சிவம் தீட்சித் கூறும்போது, உள்ளூர்வாசிகளான அசோக் தீட்சித், அனில் தீட்சித் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் வீட்டுக்கு தீ வைத்தனர்.

இதில் நானும், எனது தந்தையும் உயிர் தப்பினோம். தாயாரும், சகோதரியும் உயிரிழந்தனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் இதில் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடு தீ பிடித்து எரிந்ததற்கான சரியான காரணம் எதுவென தெரியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்