பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சுத்தப்படுத்த வித்தியாசமாக யோசித்த அரசுப்பேருந்து ஓட்டுனர்! வைரல் வீடியோ

வித்தியாசமாக யோசித்த ஒரு ஓட்டுனர், இருக்கையில் அமர்ந்தவாறே வைப்பரை கொண்டு கண்ணாடியை சுத்த செய்து ஆச்சரியப்படுத்துகிறார்.

Update: 2022-10-13 11:01 GMT

லக்னோ,

பேருந்தில் உள்ள முன் பக்க கண்ணாடியை சுத்தப்படுத்த வைப்பர் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வண்டியின் ஓட்டுனர் பேருந்தை விட்டு கீழே இறங்கி, பேருந்தின் முன்பக்கத்தின் மேலே ஏறி, காகிதம் அல்லது துணியை கொண்டு தண்ணீர் ஊற்றி கண்ணாடியை சுத்தப்படுத்துவதை காணலாம்.

ஆனால் சற்று வித்தியாசமாக யோசித்த ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனர், பேருந்தின் இருக்கையில் அமர்ந்தவாறே வைப்பரை கொண்டு கண்ணாடியை சுத்த செய்து ஆச்சரியப்படுத்துகிறார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

பழைய தண்ணீர் பட்டில் ஒன்றின் மூடியை கழற்றிவிட்டு அதில் தண்ணீரை நிரப்பி வைப்பர்களுடன் கயிற்றை கொண்டு கட்டியுள்ளார். வைப்பரில் இன்னொரு கயிறு கட்டி, அதனை தன் கைவசம் வைத்துள்ளார். இதன்மூலம், அவர் கயிற்றை இழுக்கும் போது, வைப்பர் அவருடைய வலப்புறமாக நகருகிறது. பின் கயிற்றை விடும்போது இடப்புறமாக செல்கிறது.

அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டிலும் அதே பாணியில் நகருகிறது.அதில் இருக்கும் தண்ணீர் மெல்ல கொட்டி கண்ணாடியில் விழுகிறது. இதன் மூலம், கண்ணாடி வைப்பரால் சுத்தமாக்கப்படுகிறது.

இந்த காட்சியை படம்பிடித்து பலரும் சமூக வலைடதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்