இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரிப்பு

அக்டோபரில் 7.77 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Update: 2022-12-02 11:19 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதாரத்தைக் கணிக்கும் சிந்தனைக்குழு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் மாத்தத்தைக் காட்டிலும், நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் 7.77 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நகரப்புறத்தில் வேலையின்மை விகிதம் 8.96 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளில் 7.55 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்