பஸ் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பலி

குஜராத்தில் பஸ் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-07-09 19:34 GMT

டாங்,

குஜராத்தில் பேருந்து டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சபுதாராவில் இருந்து வாகை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மாலேகான் அருகே வந்த போது, டயர் வெடித்தது. இதையடுத்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்