உருட்டு கட்டையால் தாக்கி முதியவரை கொல்ல முயற்சி
உருட்டு கட்டையால் தாக்கி முதியவரை கொல்ல முயற்சித்த வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு:-
பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 66). நேற்று அதிகாலையில் நாராயணசாமிக்கும், ஷியாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஷியாம் நாராயணசாமியை சரமாரியாக தாக்கினார். மேலும் சாலையோரம கிடந்த உருட்டு கட்டையை எடுத்து நாராயணசாமியை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில், நாராயணசாமி தலையில்பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து ஷியாம் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த நாராயணசாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்ததும் அல்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சாதாரண பிரச்சினையில் நாராயணசாமியை ஷியாம் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுகறித்துஅல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட ஷியாமை வலைவீசி தேடிவருகிறார்கள்.