திருப்பதி உண்டியல் சில்லரை நாணயங்கள் ஜெர்மன் எந்திரம் கொண்டு எண்ணப்படுகிறது

நாணயங்களை எண்ணுவதற்காக ரூ.2.80 கோடியில் ஜெர்மனியில் இருந்து புதிய தொழில்நுட்பத்தின் கூடிய 2 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-07-09 07:17 GMT

கோப்புப்படம் 

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் நகை, பணம், நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

உண்டியல்களில் காணிக்கையாக வசூலாகும் சில்லரை நாணயங்களை தேவஸ்தான ஊழியர்களை கொண்டு கோவிலுக்கு உள்ளேயே உள்ள கட்டிடத்தில் எண்ணபட்டு வருகிறது. பக்தர்கள் செலுத்தும் நாணயங்களில் தூசி, துகள் அதிக அளவில் இருப்பதால் நாணயங்களை எண்ணும் ஊழியர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் கர்நாடக தொழிலதிபர் ஒருவரின் மூலம் ரூ 10 கோடி பெறப்பட்டு தறி கொண்ட வெங்கமாம்பா அருகே புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இருந்து புதிய கட்டிடத்திற்கு நாணயங்களை கொண்டு செல்ல 2 கிரேன்கள் வாங்கப்பட்டுள்ளன. நாணயங்களை எண்ணுவதற்காக ரூ.2.80 கோடியில் ஜெர்மனியில் இருந்து புதிய தொழில்நுட்பத்தின் கூடிய 2 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

அந்த எந்திரத்தில் 13 வகையான நாணயங்களை தனியாக பிரித்து எண்ணி, பேக்கிங் செய்யும் வசதி உள்ளது. மேலும் புதிய கட்டிடத்தில் சி.சி.டி.வி கேமரா, குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நாணயங்களை எண்ணும் எந்திரத்தை கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 73,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,068 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

Tags:    

மேலும் செய்திகள்