மெட்ரோ ரெயிலில் பயணிக்க செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி-விரைவில் அமல்படுத்த முடிவு

பெங்களூருவில், மெட்ரோ ரெயிலில் பயணிக்க செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-10 22:35 GMT

பெங்களூரு: பெங்களூரு கெங்கேரியில் இருந்து பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயில்களில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணிகள் செல்வதை தடுக்கவும், கவுண்ட்டர்களில் ஊழியர்களுக்கு அதிகபடியான வேலை பளுவை குறைக்கவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், 'கியூஆர் கோடு' மூலமாக பணம் செலுத்தி பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


அதாவது பேடிஎம் செல்போன் செயலி மூலமாக 'கியூஆர் கோடை' ஸ்கேன் செய்து, அதன்மூலம் பணம் செலுத்தி பயணிகள் டிக்கெட் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக பேடிஎம் செல்போன் செயலி நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இதன்மூலம் கூடிய விரைவில் செல்போன் செயலி மூலமாக பயணிகள் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்