கைகள் கட்டப்பட்டு 4வது மாடியில் இருந்து தூக்கி வீசி இளம்பெண் கொலை; முன்னாள் கணவர் கொடூர செயல்

அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து கைகள் கட்டப்பட்ட பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-25 10:36 GMT

ஆக்ரா:

சமூகவலைதளத்தில் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கொலை ரித்திகா சிங்( வயது 30).சமூக வலைதளத்தில் 44 ஆயிரம் போலோவர்களை கொண்டுள்ள ரித்திகா சிங் பேஷன், உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்குவார். ரித்திகா, 2014ல் ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கணவரை பிரிந்தார்.

இவர் தனது கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, முகநூல் மூலம் அறிமுகமானபிரோசாபாத்தைச் சேர்ந்த விபுல் அகர்வால் என்ற நபருடன் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் அராவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 4 வது மாடியில் வாழ்ந்து வந்தார். 2018 இல் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு விபுலுடன் வாழத் தொடங்கினார்.

நேற்று ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் வெள்ளிக்கிழமை ரித்திகா சிங் பிளாட்டுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அங்கு அவர்கள் விபுல் மற்றும் ரித்திகாவை தாக்க ஆரம்பித்தனர். விபுலை அவர்கள் குளியலறையில் வைத்து பூட்டினர், பின்னர் ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி அவரை பால்கனியில் இருந்து தூக்கி வீசினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் ரித்திகாசிங் பலியனார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். இதை பார்த்த இரண்டு ஆண்கள் ஓடிவிட்டனர், ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ரித்திகா சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரனிஅ நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்