ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் லாட்ஜில் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூர் லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-06-08 12:20 GMT

திருச்சூர்

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பீட்டர். இவரது மனைவி சுனி பீட்டர், மகள் ஐரின். சந்தோஷ் பீட்டர் கடந்த பல வருடங்களாக குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். கேரள மாநிலம் திருச்சூருக்கு குடும்பத்துடன் சென்ற அவர், அங்கு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் மூன்று பேரும் லாட்ஜில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.அவர்கள் தங்கியிருந்த அறையில் நடத்திய பரிசோதனையில் சந்தோஷ் பீட்டர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது.அதில், தங்களை சிலர் ஏமாற்றி விட்டதாகவும், பண நெருக்கடிகாரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்