குழந்தை திருடன் என நினைத்து பிச்சைக்காரர் மீது தாக்குதல்

குழந்தை திருடன் என நினைத்து பிச்சைக்காரர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

Update: 2022-09-22 21:52 GMT

பெங்களூரு: வடகர்நாடகத்தில் குழந்தை கடத்தல் பீதி அதிகரித்து உள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிதிரிபவர்களை பிடித்து மக்கள் தர்ம-அடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யாதகிரி டவுன் ஹத்திகுனி கிராஸ் பகுதியில் நேற்று காலை ஒருவர் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்தார்.

அவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரை குழந்தை திருடன் என்று நினைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து தாக்குதலுக்கு உள்ளான நபரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் குழந்தை திருடும் கும்பலை சேர்ந்தவர் இல்லை என்றும், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியதும் தெரியவந்தது. பின்னர் அந்த நபரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்