அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு தேவை

அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு தேவை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-29 18:45 GMT

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சந்தாப்புராவில் நடந்த நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் டாக்டர் ஒய்.சின்னப்பா கலந்துகொண்டு கூறியதாவது:- கர்நாடகத்தில் அனைத்து மக்களும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் சமீப நாட்களாக அரசியல் அமைப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வுடன் இருந்தால் அதன் மூலம் வரும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும். விதிமுறைகள் மீறும்போது, அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அதற்கு அனைத்து அமைப்புகளும் தயாராக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்