பெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன

பெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன என மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2023-08-25 18:45 GMT

பெங்களூரு :-

பெங்களூரு நகரில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணி குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பெங்களூருவில் நடந்த கணக்கெடுப்பில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டில் 2¼ லட்சம் தெருநாய்கள் இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தெருநாய்கள் கடித்ததாக 42 ஆயிரம் வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டில் அது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும் தடுப்பூசிகளும் போடப்படுகின்றன என்றனர்.

மேலும் தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தெருநாய்களை கணக்கெடுக்கும்பணி சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்