சாகர் அருகே வேன் மோதி தொழிலாளி சாவு

சாகர் அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-11-05 19:00 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பைராபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா(வயது 46). கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றார். பின்னர் அவர் பொருட்களை வாங்கி விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது சாலையில் சிகாரிபுராவில் இருந்து ஆம்னி வேன் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. பின்னர் சாலையோரம் நடந்து சென்று ெகாண்டிருந்த சிவப்பா மீது மோதியது.

இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்