ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

Update: 2023-03-20 22:15 GMT

புதுடெல்லி, 

ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய (ஓ.ஆர்.ஓ.பி.) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு மத்திய அரசு உட்பட வேண்டும் என்றும், 6 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள், வீர தீர செயல் விருது பெற்றவர்கள் ஆகியோருக்கான ஓ.ஆர்.ஓ.பி. நிலுவைத் தொகையை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், 70 வயதான ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஓ.ஆர்.ஓ.பி. நிலுவைத் தொகையை ஜூன் 30-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், ஓ.ஆர்.ஓ.பி. அனைத்து நிலுவைத் தொகையையும் மூன்று தவணைகளில் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சீலிட்ட உறையில் மத்திய அரசு அளித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கொள்கையின்படி, ஓய்வூதியம் நிர்ணயிக்கும் பணியை 2019 ஜூலை 1-ந்தேதி தொடங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என கடந்த 2022-ம்ஆண்டு அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்