ரியல்எஸ்டேட் பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்வதே சரியானது; ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா பேச்சு

ரியல் எஸ்டேட் பிரச்சினைகளை பேசி தீர்த்துகொள்வதே சரியானது என்று ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-25 22:14 GMT

ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று ரியல்எஸ்டேட் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தேசிய லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டது. இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியும், கர்நாடக சட்ட சேவை ஆணையத்தின் தலைவருமான வீரப்பா கலந்துகொண்டார். ரியல்எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனங்கள், கர்நாடக ரியல்எஸ்டேட் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது ரியல்எஸ்டேட் விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் சமரச பேச்சு மூலமாகவே நீதிபதி முன்னிலையில் தீர்த்து வைக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி வீரப்பா பேசியதாவது:-

பெங்களூருவில் லோக் அதாலத் மூலமாக 300 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ரியல்எஸ்டேட் விவகாரங்கள் சம்பந்தப்பட்டதாகும். இதுபோன்ற ரியல்எஸ்டேட் விவகார வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பது மனதிற்கு மிகுந்த நிம்மதியை கொடுக்கிறது. தேவையில்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நேரமும், பணமும் தான் வீணாகிறது. ரியல்எஸ்டேட் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமரசமாக பேசி தீர்த்து கொள்வது சரியானதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்