பெண்ணுக்கு, காப்பீடு நிறுவனம் ரூ.3¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

பெண்ணுக்கு, காப்பீடு நிறுவனம் ரூ.3¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-17 18:45 GMT

பெங்களூரு,: பெங்களூரு கப்பன்பேட்டை பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் மருத்துவ காப்பீடு செய்து இருந்தார். இதற்காக அவர் ஆண்டு பிரிமிய தொகையாக ரூ.28 ஆயிரத்து 620-ஐ செலுத்தி வந்தார். இந்த காப்பீடு தனது மனைவி, மகனுக்கும் பொருந்தும் வகையில் பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு உடல் பருமன் தொடர்பான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சைக்காக ரூ.3 லட்சமும், ஆஸ்பத்திரி செலவுகளாக ரூ.1 லட்சமும் ஆகி இருந்தது. இந்த நிலையில் அவர் காப்பீட்டு நிறுவனத்தில், மருத்துவ காப்பீட்டு தொகையை விடுக்குமாறு கோரி உள்ளார். ஆனால் அதற்கு காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், உடல் பருமன் தொடர்பாக சிகிச்சைகள் காப்பீட்டிற்கு உட்பட்டது கிடையாது எனவும் கூறிஉள்ளது. இதையடுத்து தொழிலதிபர், இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், காப்பீடு தொகை என்பது அனைத்து விதமான மருத்துவ செலவுகளுக்கும் உகந்தது என கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.20 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், அவருக்கு இடையூறு செய்ததால் கூடுதலாக ரூ.40 ஆயிரத்தை வழங்கவும் நீதிபதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்