மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து.!

பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Update: 2023-09-16 09:02 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. 'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டாக பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, முதல் பொதுக்கூட்டம் மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் அறிவித்துள்ளார்.

எனினும், பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்