வரிசையில் நிற்க கூறிய மருத்துவர்... தந்தையின் மடியிலேயே உயிரிழந்த 4 வயது குழந்தை

உத்தரகாண்டில் அவசர சிகிச்சை வார்டில் மருத்துவர் அனுமதி மறுத்த நிலையில், வரிசையில் நின்ற தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-09-15 07:30 GMT



டேராடூன்,


உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல்நல குறைவால் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர். ஆனால், அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை வார்டில் சேர்க்க மருத்துவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து, அவர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு போகும்படி கூறப்பட்டார். அந்த வார்டில் வரிசை நீண்டு இருந்தது. மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனவே, வரிசையில் பெற்றோர் நின்றனர்.

நீண்டநேரம் அவர் வரிசையிலேயே காத்திருந்து உள்ளார். ஆனால், அதற்குள் அவசரகால சிகிச்சை தேவைப்பட்ட அந்த குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டது. பெற்றோர் இருவரும் குழந்தையின் மறைவால் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதனர். அது காண்போரை கலங்க செய்தது.

அவசர சிகிச்சை தேவைப்படும்போது, அதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத மற்றும் மருத்துவ வசதி கிடைக்க பெறாத சூழலில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்