காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

சிக்கமகளூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-19 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி முன்பு நேற்று பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சந்தோஷ் கோட்டியான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, 'பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் முன்னோடியாக விளங்கிய மகான்களின் வரலாறுகள் மாநில பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.

தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளிக்கூட மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மாநில பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள தேச தலைவர்களின் வரலாறுகளை நீக்க முடிவு செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது' என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்