நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டம்: உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதி கைது
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்த பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டான்.;
லக்னோ,
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் இருந்த பயங்கரவாதி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாதியான முகம்மது நதீமை, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது.
கைது செய்யபட்ட முகம்மது நதீம், நுபுர் சர்மாவை கொலை செய்ய பணிக்கப்பட்டு இருந்ததாகவும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் தெஹ்ரிக் இ தாலிபான் பயங்கரவாத இயக்கங்கள் பயிற்சி அளித்ததாகவும் போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். முகம்மது நதீமிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.