காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-13 00:28 GMT

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான பட்ராடா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நர்லா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்