2 ஆண்டுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி...!

சிறுமிக்கு கடந்த கடந்த 2021-ம் தேதி அந்த இளைஞன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

Update: 2023-01-08 00:04 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் தெற்கு ஹூண்டா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதேபகுதியை சேர்ந்த இளைஞன் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அந்த இளைஞன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை புகார் கொடுத்த சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சுபாஷ் மொஹலா பகுதியில் அந்த இளைஞரின் வீடு மற்றும் பெட்டிக்கடை உள்ளது. அந்த கடைக்கு இன்று துப்பாக்கியுடன் வந்த சிறுமி தனக்கு 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனின் தாயை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமியை போலீசார் கைது செய்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்