ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஆயுதங்களை தயாரிக்க திட்டம்!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான "சாப்", இந்தியாவில் ஆயுதங்களை தயாரிக்கவுள்ளது.

Update: 2022-09-27 16:53 GMT

புதுடெல்லி,

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான "சாப்", இந்தியாவில் ஆயுதங்களை தயாரிக்கும் உள்கட்டமைப்பு வசதியை அமைக்கவுள்ளது.

இந்த புதிய உள்கட்டமைப்பு வசதியில் 2024இல் இருந்து உற்பத்தி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கார்ல்-குஸ்டாப் எம்4 ரக ஆயுத அமைப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

கார்ல்-குஸ்டாப் எம்4 ரக துப்பாக்கிகள், இந்திய ஆயுதப்படைகளால் ராணுவத்துக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. புதிய உள்கட்டமைப்பு வசதியில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் உலகமெங்கும் தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான சாப்பின் மூத்த துணைத் தலைவர் கோர்கன் ஜோஹன்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இதை நாங்கள் செய்யவில்லை. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் நிறுவனம் அதன் திறனை அதிகரிக்கும். ஆயுத அமைப்பில் அதிக ஆர்வம் உள்ளது. இந்த ஆயுத அமைப்பு ராணுவ டேங்க்குகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்