சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் தேர்வை 'கொலிஜியம்' நிறுத்தி வைத்தது..!!

2 உறுப்பினர்களின் ஆட்சேபனை எதிரொலியாக 4 நீதிபதிகளின் தேர்வை கொலிஜியம் நிறுத்தி வைத்தது.

Update: 2022-10-10 20:56 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை 5 நீதிபதிகள் அடங்கிய 'கொலிஜியம்' தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் இடங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்ய கடந்த மாதம் 30-ந் தேதி நடப்பதாக இருந்த 'கொலிஜியம்' கூட்டம் நடக்கவில்லை.

அதையடுத்து, 5 நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, நீதிபதிகள் தேர்வுக்கு எழுத்து மூலம் ஒப்புதல் கேட்கப்பட்டது. நேரடி ஆலோசனை நடத்தாமல் இப்படி ஒப்புதல் கேட்பது இதுவே முதல்முறை.

எனவே, அதற்கு 'கொலிஜியம்' உறுப்பினர்களான 2 நீதிபதிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.ஏ.நாசர் ஆகியோர்தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதனால், நீதிபதிகளை தேர்வு செய்வதை 'கொலிஜியம்' நிறுத்தி வைத்துள்ளதாகவும் 'கொலிஜியம்' சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், நவம்பர் 8-ந் தேதி ஓய்வு பெறுகிறார். பணிநாட்கள் ஒரு மாதத்தை விட குறைவாக இருப்பதால், 4 நீதிபதிகள் தேர்வு பணியை அடுத்த தலைமை நீதிபதியிடம் விட்டுவிட யு.யு.லலித் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்