அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு...!

ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.;

Update:2024-01-03 07:40 IST

டெல்லி, 

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்