மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரி வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Update: 2022-10-29 18:40 GMT

பா.ஜ.க.வை சேர்ந்த வக்கில் அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், வயது, புகைப்படம், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இதனால் வாக்காளர்கள் நேர்மையான வேட்பாளர்களை தேர்வு செய்யவும், சாதி, மதவாதத்தை தடுக்கவும், வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சிகளின் ஆதிக்கம் கட்டுப்படும், நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறவும் வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்