புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

கடுமையான வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-05-30 20:04 IST

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடுமுறையை நீட்டித்து 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடுமையான வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்