கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

பள்ளி மாணவர்கள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது.;

Update:2022-09-09 17:36 IST

பல்லியா,

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்