கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா இன்று முதல் தேர்தல் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இன்று (திங்கட்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதல்கட்டமாக அவர் 7 நாட்கள் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Update: 2023-04-23 21:41 GMT

இன்று முதல் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்துவிட்டது. மனுக்கள் வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்திற்கு வரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராயைா தனது பிரசாரத்தை இன்று முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

அவர் இன்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோகாக் செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து அரபாவி, பைலஹொங்கலா, சவதத்தியில் நடைபெறும் பிரசார கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு ஓட்டு சேகரிக்கிறார்.

ஆதரவு திரட்டுகிறார்

அதன் பிறகு 25-ந் தேதி உகார், ஹாலேகேரி, ராயபாக், நிப்பானி, பெலகாவி தொகுதிகளில் நடைபெறும் காங்கிரசின் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் 26-ந் தேதி ஹூவினஹடகலி, பி.டி.ஹள்ளி, ஹகரி, கம்ப்ளி, விஜயநகர், சண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கட்சியின் பிரசார கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து 27-ந் தேதி சிரகுப்பா, மான்வி, ராய்ச்சூரில் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பிறகு 28-ந் தேதி தேவதுர்கா, லிங்கசுகூரு, மஸ்கி, சிந்தனூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். 29-ந் தேதி கூட்லகி, அரப்பனஹள்ளி, ஒசப்பேட்டே தொகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர், 30-ந் தேதி செல்லகெரே, இரியூர், சிக்கநாயக்கனஹள்ளி, திப்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதைத்தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக பெங்களூரு வருகிறார்.

மைசூரு மண்டலம்

பின்னர் அவர் தனது 2-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் அதாவது மைசூரு மண்டலத்தில் தொடங்க உள்ளார். இந்த பகுதியில் ஒரு வாரம் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்