ஷீனா போரா வழக்கில் தொடர்புடைய சஞ்சீவ் கண்ணாவிற்கு ஜாமீன்

இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவிற்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

Update: 2022-06-21 15:55 GMT

ஷீனா போரா

மும்பை,

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் தொடர்புடைய இந்திராணியின் முன்னாள் கணவரான பீட்டர் முகர்ஜிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜாமீன் பெற்று இருந்தார். இந்த வழக்கில் இணை குற்றவாளிகளான டிரைவர் ஷியாம்வர் ராய் மற்றும் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர்.

கொலையில் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் கண்ணா இந்திராணியுடன் சதி செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே சஞ்சீவ் கண்ணா ஜாமீன் வழங்குமாறு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நீதிபதி பாரதி டாங்கரே முன்னிலையில் நடந்து வந்தது. இந்த விசாரணை நிறைவில் சஞ்சீவ் கண்ணாவிற்கு ரூ.1 லட்சம் உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டாக அவரது வக்கீல் ஷ்ரேயான்ஷ் மிதாரே தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்