சிறுவனுக்கு பாலியல் தொல்லை; திருநங்கை கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-06 16:11 GMT

சிக்கமகளூரு-

தாவணகெரே டவுன் ஜலகாரஓனி பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் அந்த சிறுவன் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திருநங்கையான அனுபமா என்பவர் சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அனுபமா, சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து சிறுவனுக்கு, அனுபமா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வெளியே கூறக்கூடாது என்று சிறுவனை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனாலும் வீட்டிற்கு வந்த சிறுவன், பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கே.டி.ஜே. நகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கை அனுபமாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்