அரசுகளை தொடர்ந்து கொலை செய்யும் "சீரியல் கில்லர்" - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
அரசுகளை தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் நம் நாட்டில் உள்ளதாக சிறப்பு கூட்டத்தொடரில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.;
புதுடெல்லி,
டெல்லி சட்டசபையில் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது-
கோவா, கர்நாடகா, மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா போன்ற பல அரசாங்கங்களை இன்றுவரை அவர்கள் கவிழ்த்துள்ளனர். அரசுகளை தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் நம் நாட்டில் உள்ளது. அரசுகளை கொல்லும் விதம் ஒரே போல இருக்கிறது மக்கள் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள், அவர்கள் அதை கவிழ்க்கிறார்கள்.
பாஜக இதுவரை 277 எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. ஆப்ரேஷன் தாமரைக்கு 5 ஆயிரத்து 500 கோடி செலவு செய்துள்ளனர். டெல்லியில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 800 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வசூல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தில் பாஜக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர்.
மணிஷ் சிசோடியா வீட்டில் தொடர்ந்து 14 மணி நேரம் சோதனை நடத்தியும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. நகைகள் எதுவும் கிடைக்கவில்லை, பணம் எதுவும் கிடைக்கவில்லை. நிலம், சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எதுவும் கிடைக்கவில்லை. அது பொய்யான ரெய்டு
ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட வெளியேறவில்லை என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக, நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.