மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-28 16:16 GMT

புதுடெல்லி,

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வருகிறாா். இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ந் தேதி முடிவடைந்தது.

இதனையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் 3 மாதங்கள் தொடர மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற அவா் தற்போது பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில், இவரது பதவிக்காலம் நாளை மறுநாள் முடிவடைகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தலைமை வக்கீலாக வெங்கடரமணி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்