இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் மீது புகார்
இளம்பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.;
பெங்களூரு;
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் இருந்து பொம்மனஹள்ளிக்கு ஒரு இளம்பெண் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இளம்பெண்ணிடம், ஆட்டோ டிரைவர் ஏற்கனவே பேசியதை விட கூடுதல் கட்டணம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் அந்த இளம்பெண் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார்.
இதையடுத்து ஆட்டோவை நிறுத்திய டிரைவர் இளம்பெண்ணை கீழே இறக்கிவிட்டதுடன் ஆபாசமாக திட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர் மீது இளம்பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.