பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2023-01-31 20:46 GMT

மங்களூரு:-

பெற்றோர் கண்டிப்பு

மங்களூரு குலசேகர் அருகே கொடிமுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகதீஷ். இவரது மகன் ஞானேஷ் (வயது 14). இவன் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஞானேஷ், சரியாக படிக்காமல் எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஞானேசை அவனது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் ஞானேஷ், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி உள்ளான். இதனால், ஞானேசை அவனது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த ஞானேஷ், தனது அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவன் வெளியே வராததால்,

சந்தேகமடைந்த ஜெகதீஷ், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஞானேஷ் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஞானேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் ஞானேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்