650 பக்தர்களை மேல்மருவத்தூர் கோவிலுக்கு அனுப்பி வைத்தார், ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ.
ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. 650 பக்தர்களை சொந்த செலவில் மேல் மருவத்தூர் கோவிலுக்கு அனுப்பி வைத்தார்.
கோலார் தங்கவயல்:
ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. 650 பக்தர்களை சொந்த செலவில் மேல் மருவத்தூர் கோவிலுக்கு அனுப்பி வைத்தார்.
மேல் மருவத்தூர் கோவில்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா முழுவதும் சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மேல் மருவத்தூருக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க கடந்த மாதம்(நவம்பர்) தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், அரசு பஸ் பணிமனை நிர்வாகத்திடம் பேசி முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தை செலுத்தினார்.
அதன்படி கோலார் தங்கவயல் நகரம் மற்றும் கிராம புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மேல் மருவத்தூர் மற்றும் சபரிமலை அய்யப்பன் சுவாமியை காண இலவச பஸ் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று 2-ம் கட்டமாக கோலார் தங்கவயல் உரிகம்பேட்டை பகுதியில் உள்ள சோமேஷ்வரர் கோவில் அருகில் இருந்து 5 அரசு பஸ்களில் 350 பக்தர்கள் மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்தவர்கள் ஆவர். அவர்களை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. வழியனுப்பி வைத்தார்.
உணவுக்காக ரூ.75 ஆயிரம்
அத்துடன் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட செலவுக்காக பொறுப்பாளர்களிடம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் 5 பஸ் பொறுப்பாளர்களிடம் ரூ.75 ஆயரத்தை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பை கடவுள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, வார்டு கவுன்சிலரும், நகரசபை துணைத் தலைவருமான தேவி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பேத்தமங்களா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்களை மேல்மருவத்தூருக்கு அரசு பஸ்களில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. வழியனுப்பி வைத்தார்.