தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க திட்டம் - என்.ஐ.ஏ கோர்ட்டு தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் குற்றவாளிகள் என்று என்.ஐ.ஏ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.;

Update:2022-07-13 09:19 IST

கொச்சி,

கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் குற்றவாளிகள் என்று என்.ஐ.ஏ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்ததாக 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ கோர்ட்டு மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மூவருக்குமான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் கோர்ட்டு அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் கோர்ட்டு தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்