கார்வார் கடற்கரையில் அரியவகை நண்டு பிடிபட்டது
கார்வார் கடற்கரையில் அரியவகை நண்டு பிடிபட்டது
உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே மஜாலி கடற்கரை அமைந்துள்ளது. கோவா-கர்நாடக எல்லையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில் மஜாலி கடற்கரையில் மீனவரின் வலையில் அரியவகை நண்டு ஒன்று பிடிபட்டுள்ளது. அதாவது கண்கள் வெளியே நீண்டு இருக்கும் வகையில் அந்த நண்டு காணப்படுகிறது. ஹவாய் தீவு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த வகை நண்டு அதிகளவு காணப்படுகிறது.
இந்தியாவில் இந்த நண்டு மிகவும் அரிதாகும். இந்த நண்டு பிடிபட்டது குறித்து கடல்சார் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர் சிவக்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், அந்த நண்டை பெற்று கொண்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த நண்டின் அறிவியல் பெயர், 'சூடோ பொத் தாலமஸ் விஜில்' என்பதாகும்.