ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்- 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவு
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 55.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல்ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 55.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.