ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 14 பேர் மீட்பு

சுரங்கத்தில் நேற்றிரவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது.

Update: 2024-05-15 07:55 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர். கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு மேல்பகுதிக்கு திரும்பியபோது லிப்டின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா  தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்ற 14 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்