தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி ராகுல்காந்தியிடம் இல்லை; ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி ராகுல்காந்தியிடம் இல்லை என ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
உப்பள்ளி;
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) தார்வார் வர உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகைையயொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அவருக்கு 900 கிராம் எடையிலான சித்தாரோட சுவாமி சிலை நினைவு பரிசாக வழங்கப்படும். ஊழல் பற்றி பேச காங்கிரசாருக்கு தகுதி இல்லை. ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர்கள் ஊழல் பற்றி பேச வேண்டாம்.
காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு இல்லை. தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி அவரிடம் இல்லை. இந்தியாவை இணைப்போம் என்று பாதயாத்திரை புறப்பட்டுள்ள ராகுல்காந்தி, அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சியினரை இணைக்க முயற்சிக்கலாம்.
பா.ஜனதா பற்றி பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் கிடையாது. பா.ஜனதாவில் இணைந்து மேல்சபை தேர்தலில் ெவற்றி பெற்ற பிறகு பசவராஜ் ஹொரட்டி ஓரம்கட்டப்படுவதாக கூறுகிறீர்கள். கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அவருக்கு கவுரவம் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.