ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

Update: 2022-06-30 01:39 GMT

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் டி.எஸ். இ.ஓ என்று அழைக்கப்படும் 365 கிலோ எடை கொண்ட, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைக்கோள் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை பார்க்கும் வசதி கொண்டது. இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் கசிவு கண்டறிதல் போன்ற தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும்.

இந்த செயற்கைக்கோளுடன், சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 உள்பட 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. அத்துடன் புவி சுற்றுப்பாதையுடன் பூமியை நிலையானதாகச் சுற்றும் சோதனைத் தொகுதி ஒன்றும் ராக்கெட்டில் பொருத்தி ஏவப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து ராக்கெட் ஏவுவதை நேரடியாக பார்ப்பதற்காக பொதுமக்கள் முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 4 மணி உடன் நிறைவு பெற்றது. இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்