ஜம்மு காஷ்மீரில் ஆசிரியை சுட்டுக்கொலை; பண்டிட் சமூகத்தினர் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஓர் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Update: 2022-05-31 16:28 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள கோபால்போரா என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஜ்னி பாலா (வயது 36) என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். இந்து சமூகத்தை சேர்ந்த அந்த ஆசிரியை இன்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அண்மையில் கஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து பெரிய அளவில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பண்டிட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக காஷ்மீர் நிர்வாகம் தரப்பில் உறுதியளித்தது.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை காஷ்மீர் பண்டிட்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவின் பல நகரங்களில் போரட்டத்தில் ஈடுபட்ட பண்டிட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் உருவப் படத்தையும் எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் சமூகத்தினருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்