ஆடுகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
தொட்டபள்ளாப்புராவில் ஆடுகளுடன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகாவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்மநபர்கள் தொடர்ந்து திருடி சென்று விற்று வருகின்றனர். இதனை கண்டித்து தொட்டபள்ளாப்புரா தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடுகள் திருட்டுப்போவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், திருடர்களை கைது செய்ய வேண்டும், திருட்டுப்போன ஆடுகளுக்காக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன் ஆடுகளின் கழுத்தில் திருடர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகள் கட்டி தொங்கவிட்டு விவசாயிகள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தாாகள்.