சிருங்கேரி அருகே கார் மோதியதில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து ; 15 மாணவர்கள் காயம்

சிருங்கேரி அருகே கார் மோதியதில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-06-15 15:08 GMT

சிக்கமகளூரு;

பள்ளி வேன்-கார் மோதல்

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி டவுனில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த தனியார் பள்ளியில் சுற்றுவட்டார பகுதி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளை வேனில் பள்ளிக்கும், வீட்டிற்கும் அழைத்து செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வேன் ஒன்று 15 மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தது. சிருங்கேரி தாலுகா சிட்லி சாலையில் சென்றபோது எதிரே வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

15 மாணவர்கள் காயம்

இதில் இடிபாடுகளில் சிக்கி பள்ளி வேனில் இருந்த டிரைவர் மற்றும் 15 மாணவ-மாணவிகளும் காயம் அடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், காயம் அடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறித்த சிருங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். அப்போது மாணவ-மாணவிகளின் பெற்றோர் வேனில் ஒரே நேரத்தில் 15 மாணவர்களை அழைத்து சென்றதே விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டினர்.

மேலும் இது குறித்து போலீசில் புகாரும் அளித்தனர். இதை ஏற்ற சிருங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்