குட்டி இளவரசருக்கு மாலை அணிவித்த பிரதமர் மோடி

மைசூரு அரண்மனையில் குட்டி இளவரசருக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்தார்.

Update: 2022-06-21 21:39 GMT

மைசூரு அரண்மனையில் குட்டி இளவரசர் ஆத்யவீருக்கு பிரதமர்  மோடி மாலை அணிவித்தார்.

மைசூரு:

மைசூரு அரண்மனைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, மகாராணி பிரமோதா தேவி நினைவுப்பரிசு ஒன்றை அரண்மனை சார்பில் வழங்கினார். அதில் சாமுண்டீஸ்வரி அம்மனின் துர்க்கை அம்மன் அவதாரம் அடங்கிய உருவம் வெள்ளியினால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர், இளவரசர் யதுவீர், அவரது மனைவியும், இளவரசியுமான திரிஷிகா குமாரி, குட்டி இளவரசர் ஆத்யவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மற்றும் அரச குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

அரண்மனை வளாகத்தையும், அங்கிருந்த அரிய பொருட்களையும், மன்னர்களுடைய நினைவுச்சின்னங்களையும் பார்த்து மெய்சிலிர்த்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வெள்ளித்தட்டில் உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி, குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மோடி, குட்டி இளவரசர் ஆத்யவீருக்கு மாலை அணிவித்தார். மேலும் குட்டி இளவரசருக்கு மோடி முத்தமிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்