தன்னை நெஞ்சில் சுமந்த தாயை தோளில் சுமந்த பிரதமர் மோடி.. சோகத்தில் கிழே விழுந்து வணங்கிய காட்சிகள்
பிரதமர் மோடியின் தாயார் ஹீரபென் மோடி இன்று அதிகாலை காலமானார்.
அகமதாபாத்,
குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரின் உடலை மருத்துவமனையில் இருந்து சுமந்து சென்றார்.
அகமதாபாத்தில் உள்ள தனது சகோதரரான பங்கஜ் மோடியின் வீட்டில் அவரது தாயாரின் பூத உடல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.