இலங்கை அதிபருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த 21 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய கடிதத்தில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான பாரம்பரியம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு , மக்களுக்கு இடையேயான உறவு அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும்" என்றும் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.